வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது 

அகமதாபாத்:மார்ச் 19- குஜராத் பல்கலைகழக விடுதியில் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், ரம்ஜான் நோன்பை முன்னிட்டு, விடுதி வளாகத்தில் நேற்று முன்தினம் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.துதொடர்பாக மாணவர்களில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதலில் வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம்தொடர்பாக அகமதாபாத் போலீஸார் அடையாளம் தெரியாத 20 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களை தாக்கியதாக ஹிதேஷ் மேவாடா,பரத் பட்டேல் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து ஷிட்டிஜ் பாண்டே,ஜிதேந்திர பட்டேல்,சாகில் துதாதித்யா ஆகிய மூவரை நேற்று மாலையில் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களை என தனி விடுதி அறைகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்கலைகழக துணை வேந்தர் நீர்ஜா குப்தா தெரிவித்தார்.