வெள்ளப் பகுதிகளில் முதல்வர் ஆய்வு

ராம்நகர் : ஆகஸ்ட். 29 – முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ராம்நகர் மாவட்டத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தியிருப்பதுடன் , பாதிக்கப்பட்டவர்களிடம் நலன் விசாரித்தார். தவிர இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். பக்ஷி ஏரி உடைந்து பெருமளவிலான விவசாய நிலங்களில் நீர் புகுந்துள்ளதை முதல்வர் நேரில் பார்வையிட்டுள்ளனர். தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று நிவாரணம் அளிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மழையால் இடிந்து விழுந்துள்ள வீடுகளுக்கு உடனடியாக ஒரு லட்ச ருபாய் நிவாரணம் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் தவணை முறையில் அளிப்பதாகவும் தெரிவித்தார். பக்ஷி ஏரி உடைந்துள்ள நிலையில் அதை சரிப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அதே இடத்தில் உத்தரவிட்டுள்ளார் . பக்ஷி மற்றும் க்ஷேத்ரஹள்ளி ஏரிகள் உடைந்து ஹுனசனஹள்ளி வீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விஜயம் செய்து அனுதாபம் தெரிவித்துள்ளார். உடனடியாக தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் வெள்ளம் நுழைந்ததால் பட்டு நூல் தயாரிப்பு நிறுவங்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதுடன் அங்கு முதல்வர் நேரில் ஆய்வு செய்து பாதிப்புக்குள்ளாகியுள்ள இயந்திரங்களை முதல்வர் பார்வையிட்டார் . இதற்கிடையில் தொடர் மழையால் நடுங்கிப்போயுள்ள ராம்நகர் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் அஸ்வதநாராயணா ஆலோசனைகள் நடத்தி மழை பாதிப்புகள் குறித்து தகவல்கள் அளித்தார்