வெஸ்ட் இண்டீசின் தினேஷ் ராம்தின், லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு

மும்பை, ஜூலை 19- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ராம்தின் தனது கடைசி போட்டியை கடந்த டி20ஐ டிசம்பரில் 2019-ல் விளையாடினார். அவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜூலை 2005-ல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். 2014-ல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ராம்தின் 17 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்தினார். இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இவர் 8 டெஸ்ட், 68 ஒருநாள் போட்டி மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 3,763 ரன்கள் எடுத்துள்ளார்.