வேகமாக பரவும் புதுவகை கொரோனா

புதுடெல்லி, டிச.17-
உரு மாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்து உள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 300 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
ஜேஎன் 1 என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த கொடூர கொரோனா தொற்று தொடர்ந்து பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத் துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது
இந்த கொரோனா தொற்றுக்கு
கேரளாவில் நேற்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அப்துல்லா (80) மற்றும் கேரள மாநிலம் பழங்காடியைச் சேர்ந்த பெட்போலியா கே. குமரன் (77) ஆகியோர் பலியானார்கள். இதனால்பனூர் நகரசபை பகுதியில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 339 புதிய கோவிட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே கர்நாடக மாநிலத்திலும் முழு அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் பிராணவாயு ஆக்ஸிஜன் வசதிகள் தேவையான மருந்துகள் கையிருப்பு வைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருவேளை மீண்டும் கொரானா தொற்று அலை கர்நாடக மாநிலத்தில் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் மாறுதலான ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தக் கொடூர தொற்று நோயை தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது சமூக இடைவெளி கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொடிய கொரோனா தொற்றுநோய் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி ஓய்ந்து இருந்த நிலையில் தற்போது அதன் தொற்றுப் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருவது உலக அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது