வேகமெடுக்கும் குரங்கு அம்மை பரவல்

டெல்லி: ஆக. 5குரங்கு அம்மை தொற்று நோயை பொது சுகாதார அவரச நிலையாக அமெரிக்கா பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் தீவிரமடைந்து வருவதால் மாகாண அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்து வந்தன. நியூயார்க், இலினாய்ஸ், கலிபோர்னியாவில் மருத்துவ அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நிலையில் குரங்கு அம்மை நோயை அமெரிக்கா பொது சுகாதார அவரச நிலையாக நேற்று அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்று அமெரிக்க அதிபருக்கான மருத்துவ துறை ஆலோசகர் அந்தோணி பவுசி கூறியுள்ளார்.