தேவேகவுடா மீது குமாரசாமி அதிருப்தி

பெங்களூரு: தீவிரமாக சுற்றுப்பயணம் கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சி முதல்கட்டமாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ஹாசன் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தன்னிச்சையாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி, பவானிக்கு டிக்கெட் வழங்க முடியாது என்றும், அங்கு கட்சியின் சாமானிய தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதில் எச்.டி.ரேவண்ணா முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவின் மூத்த மகன் ஆவார். குமாரசாமி அவரது 2-வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.