வேங்கைவயல் விவகாரம் – குரல் சோதனை

புதுக்கோட்டை, மார்ச் 23- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் அண்மையில் மனு தாக்கல் செய்தனர். இந்தமனு மீதான விசாரணை, நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.அப்போது, குரல் மாதிரி சோதனைக்கு தங்களை உட்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவை 3 பேர் இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே, இது தொடர்பான விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைப்பதுடன், அன்றைய தினம் இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.