வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

பெங்களூரு, மார்ச் 28:
மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப். 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆளும் காங்கிரசுக்கும், பாஜக‌, ஜே.டி.எஸ்.,மஜத‌ கூட்டணிக்கும் இடையே கடும் தேர்தல் போர் தொடங்கி உள்ளது.
மாநிலத்தின் உடுப்பி, சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா, மைசூரு, சாமராஜநகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, மத்திய பெங்களூரு, சிக்கபள்ளாப்பூர் மற்றும் கோலார் ஆகிய தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு. ஏப். 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது
இந்த தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியானதையடுத்து, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஏப். 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்கள் ஏப். 5 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப். 8 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்த தொகுதிகளுக்கான தேர்தலுக்கு தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. வரும் ஏப். 4 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
மக்களவைத் தேர்தல் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக, முதல் கட்டமாக ஏப். 26ம் தேதியும், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 25 வேட்பாளர்களின் பெயர்களையும் பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது. சிக்கபள்ளாப்பூர், கோலார், சாமராஜநகர் மற்றும் பெல்லாரி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் இறுதி செய்யவில்லை.
பெங்களூரு ஊரகத் தொகுதி பாஜக வேட்பாளராக பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர். சி.என்.மஞ்சுநாத் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். மேலும் இந்த தொகுதி மாநிலத்தின் உயர் அழுத்த தொகுதியாகும்.
பாஜக வேட்பாளர் டாக்டர். சி.என் மஞ்சுநாத் ஏப். 4 ஆம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

டி.கே.சுரேஷ் வேட்புமனு தாக்கல்: மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று பெங்களூரு கிராமப்புற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டி.கே.சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அண்ணனிடம் ஆசியைப் பெற்ற டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக டி.கே.சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு துணை முதல்வரும், கேபிசிசி தலைவருமான டி.கே.சிவகுமார் மற்றும் அவரது மனைவி உஷா சிவகுமார் ஆகியோரின் ஆசி பெற்றார். பின்னர் தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.