வேப்பங்காடு கீழராமசாமியாபுரம்முத்தாரம்மன் கோவில் கொடை விழா

தூத்துக்குடி மெஞ்ஞானபுரம்: வேப்பங்காடு கீழராமசாமியாபுரம் முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடை விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
ஆவணி கொடை விழா தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு கீழராமசாமியாபுரம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி கொடை விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
நாளை தேர் பவனி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10 மணிக்கு பெண்கள் மஞ்சள் பெட்டி எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் குளித்தல், இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, சாமி வீதிஉலா, பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகியவை நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு முளைப்பாரி அலசுதல், மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜை, சாமி வீீதிஉலா, 5 மணிக்கு கஞ்சி வார்த்தல், இரவு 8 மணிக்கு பூக்குழி திறப்பு, 10 மணிக்கு தேர் பவனி, 12 மணிக்கு சிறப்பு பூஜையும், நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு பொங்கல் வைத்தல், 5 மணிக்கு கொடி இறக்கம், 5.30 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா செந்தூர்பாண்டி நாடார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விளையாட்டு விழா வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் தொடக்கப்பள்ளியின் 41-வது மற்றும் சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளியின் 31-வது ஆண்டு விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. முன்னதாக விளையாட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ஆண்டு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பல்வேறு வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், சிறப்பு பரிசுகளும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைெபறுகின்றன.