வேற்று ஜாதி இளைஞனை காதலித்த மகளை கொன்று தந்தை போலீசில் சரண்

பெங்களூர் : அக்டோபர் . 12 – வேற்று ஜாதி இளைஞனை காதலித்து வந்த மகளின் செயலால் ஆத்திரமடைந்த தந்தை மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தேவனஹள்ளி அருகில் உள்ள விஸ்வநாதபுரா போலீசாரிடம் சரணடைந்துள்ளார். தேவனஹள்ளி தாலூகாவின் கவனா (20) என்பவர் கொலையுண்ட இளம் பெண். அவளை கொலை செய்த அவளுடைய தந்தை மஞ்சுநாத் (47) போலீசில் சரணடைந்துள்ளார் . சம்பவ இடத்திற்கு விஸ்வநாதபுரா போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் . பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கொலை குற்றவாளி மஞ்சுநாத்தின் சிறிய மகள் கவனா ஒரு இளைஞனை காதலித்து தப்பியோடியிருந்தாள் . இந்த நிலையில் தன்னுடைய பெரிய மகளுடன் நேற்று நள்ளிரவு தகராறு நடந்துள்ளது .சிறியவள் ஓடி போனாள் . நீயும் வேறொரு ஜாதி இளைஞனுடன் காதலிக்கிறாயா . நாங்கள் எப்படி ஊரில் மரியாதையுடன் வாழ முடியும் . என கூவி மகளை கொன்றே விட்டார் . கோழி கடை வைத்திருந்த மஞ்சுநாத் கோழியை அறுக்கும் கத்தியாலேயே மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.