வேலை கிடைக்காத சோகத்தில் இளம் பெண் தற்கொலை

உடுப்பி: மே. 12 – வேலை கிடைக்காததால் மனம் நொந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காப்பூ தாலூகாவின் கட்டிம்கேரி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் உப்பினங்கடியை சேர்ந்த சஹனா (23) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணாவார். இவர் காப்பூ தாலூகாவின் கட்டிம்கேரியில் உள்ள தன் அக்காவின் வீட்டிற்கு வந்து விஷம் குடித்துள்ளார் . மயக்கமடைந்திருந்த சஹனாவை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்துள்ளார். தன் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கவில்லை என்ற சோகத்தில் சஹனா விஷம் அருந்தியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் மங்களூரில் எம் பி ஏ பட்ட படிப்பை முடித்த சஹனா , வேலை தேடி கொண்டிருந்தார். ஆனால் எங்கும் தன் தகுதிக்கேற்ப வேலை கிடைக்காதாதால் மனம் நொந்து விஷம் குடித்துள்ளார் . மிஷின் மருத்துவமனை , கே எம் சி மற்றும் தாலூகா மருத்துவமனை உட்பட மூன்று மருத்துவமனைகளில் 10 நாட்கள் சஹனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது . இவருடைய சாவின் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில மற்றும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வந்துள்ளன. இன்று உடுப்பியில் மொஹம்மத் நளபாத் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. சஹனாவின் மரணம் குறித்து உடுப்பியில் ஷிர்வ போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.