வேலை நிறுத்தம் வாபஸ் பெறாவிட்டால் கடும் நடவடிக்கை


பெங்களூர், ஏப். 8- போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தார் கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார். பெல்காமில் இருந்து பெங்களூருக்கு திரும்புவதற்கு முன் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது-
கோவிட் நெருக்கடி நேரத்திலும் நிதி நெருக்கடி நேரத்திலும், போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் 8% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுவது சரியல்ல. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இன்று மாலை பெங்களூரில் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வேலைக்கு திரும்புமாறு வலியுறுத்தப்படும். வேலைக்கு ஆஜராகாத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்படும் என்றார்.‌ மேலும் அவர் கூறுகையில்,இடைத் தேர்தலில் பிஜேபி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். நேற்று பெல்காமில் பிரச்சாரம் நடத்தினேன். பெல்காம் லோக்சபா தொகுதியில், மற்றும் மஸ்கி பசவ கல்யாண் சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலிலும், பிஜேபி வெற்றி பெறும் என்றார்.