வேலை வாங்கித் தருவதாக ரூ.20 கோடி மோசடி

பெங்களூர் : நவம்பர் . 29 – வேலையற்ற இளைஞர்களை குறியாய் வைத்து வேலை ஆசை காட்டி பணங்கள் பெற்று மோசடிகள் செய்துவந்த ஒருவனை வொயிட் பீல்டு போலிஸார் கைது செய்துள்ளனர். பவன் குமார் என்பவன் கைது செய்யப்பட்டிள்ள குற்றவாளி. குற்றவாளி ஒன்றல்ல இரண்டல்ல அதிரடியாக ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை மோசடி செய்துள்ளான் . பவன் குமார் சைமக் டெக்னலாஜி என்ற நிறுவனத்தை துவங்கி தொழில் நுட்ப பூங்காவில் அலுவலகம் வைத்து என் நிறுவனத்தில் வேலைகள் வழங்கப்படும் என தனக்கு அறிமுகமானவர்கள் வாயிலாக வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கவர்ந்துள்ளான் . தவிர இவன் ஆந்திராவை சேர்ந்தவர்களையே குறியாக வைத்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மோசம் செய்து 20 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தெரியவந்துள்ளது . பவன் குமார் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்கள் சம்பளம் கொடுப்பதாக ஆசை காட்டியுள்ளான் . தவிர வேறு நிறுவனங்களிலும் வேலை வாங்கி தருகுவதாக நாடகமாடி மக்களை நம்ப வைத்துள்ளான் . பின்னர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை வசூலித்துள்ளான் . பின்னர் பழைய மடி கணினிகளை கொடுத்து சேலைக்கு சேர்த்து வந்தான். ஒரு மாதம் சம்பளமும் கொடுத்து பின்னர் நிறுவனத்தை முழுதுமாக மூடிக்கொண்டு தலை மறிவானான். இதே போல் நகரின் பலபகுதிகளில் இவனுடைய கோஷ்டி இப்படி மோசடிகள் செய்து வந்துள்ளது. பணத்தை இழந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதிச்சியடைந்து வொயிட் பீல்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துகூட பிசார் நடவடிக்கையில் இறங்கி குற்றவாளியை கைது செய்துள்ளனர். டெல்லியில் தங்கியிருந்த பவன் குமாரை நகருக்கு அழைத்து வர போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து முப்பது பேர் வேளையில் சேர வந்துள்ளார் அதற்கான பணமும் தயார் என நம்பவைத்துள்ளனர் ஆயிரம் பேரிடம் வசூலித்து ஏப்பம் விட்டவன் அப்படியும் ஆசை விடாமல் உடனே டெல்லியிலிருந்து விமானத்தில் நகருக்கு வந்துள்ளான். பின்னர் அவனை தனியார் ஓட்டலுக்கு அழைத்து அங்கு பவன் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.