வேளாண் சட்டம் எதிர்த்து போராட்டம்

பெங்களூரு, செப். 27 – விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கர்நாடகத்தில் பல இடங்களில் இன்று அண்ணா சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடந்தன போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய விவசாய கொள்கைகளை எதிர்த்து அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த் துக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல இடங்களில் சாலையில் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தி விவசாயிகள் மற்றும் மக்கள் ஆதரவு இயக்கங்களை சேர்ந்த தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த பந்தால் வாகன போக்குவரத்து ஓரளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல் பட்டதுடன் வங்கிகள் செயல்பாட்டிலும் எந்த மாற்றமும் தெரிய வர வில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை வழக்கம் போலவே இருந்தது. இந்த பந்திற்கு மாநிலத்தில் இருவகை பட்ட ஆதரவு தெரியவந்தது. மாநிலத்தில் சில இடங்களில் காலை முதலே வீதியில் இறங்கிய விவசாயிகள் மற்றும் பல்வேறு சங்க இயக்கத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாரத் பந்தை ஆதரித்து நகரில் எதிர்ப்பு போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் அழைத்து சென்றனர். நகரின் மெஜஸ்டிக் மற்றும் ஆனந்த் ராவ் சர்கிளில் காந்தி சிலை முன்பு சேர்ந்த கும்பல் போராட்டத்தை துவங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூவ தொடங்கினர். அதே இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை அதனால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை, சட்டத்திற்கு புறம்பாக கும்பல் சேர வேண்டாம் என கேட்டுக்கொண்டும் பணியாத போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடருவோம் என இவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்கு வாதம் நடந்தது. நிலைமை கட்டுக்கு மீறி போகும் நிலை அறிந்தததும் சில முக்கிய பிரமுகர்களை போலீசார் அழைத்து சென்றனர். இந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் போலிசாருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். பந்துக்கு இடையிலேயும்நகரில் சுமுகமான நிலைமை உள்ளது. காலை முதலே பல இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. ஆனாலும் சிலர் தன்னிச்சையாக கடைகளை முடியும் இருந்தனர். தாவணகெரேவில் ஜெயதேவ சர்கிளில் கோடிஹள்ளி சந்திரசேகர் கோஷ்டியை சேர்ந்த விவசாய சங்க தொண்டர்கள் கைகளில் கருப்பு பட்டி கட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகள் சங்கம் உச்சவ்வன ஹள்ளி மஞ்சுநாத் தலைமையிலான தொண்டர்கள் வீதியில் காய்கறிகளை கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகளின் பொருள்களுக்கு சரியான விலைகள் கிடைப்பதில்லை , நாளுக்கு நாள் அத்யாவசிய பொருள்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. என கூவியபடி இவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பந்தின் பின்னணியில் பஸ் நிலையத்திற்கு வந்த விவசாய மற்றும் தொழிலாளர் நல சங்க உறுப்பினர்கள் பயணிகளை பந்திற்கு ஆதரவு தருமாறு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் மற்றும் பயணிகளை கேட்டுக்கொண்டனர். தார்வாடில் விவஸ்யி ஒருவர் பஸ் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். வழக்கம் போல் போக்குவரத்தை துவங்கிய பஸ் சேவையை நிறுத்துமாறு அந்த விவசாயி கூவினர் . தார்வாடின் ஜூப்ளி சர்கிளில் பஸ்களை தடுத்து நிறுத்திய விவசாய பிரமுகர் நிங்கப்பா லிகாதே தேவையென்றால் எங்கள் மீது ஏற்றிக்கொண்டு ஓட்டுங்கள் ஆனால் பஸ்களை ஒட்டாமல் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டார். சாமராஜநகரில் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் உட்பட பல சங்க இயக்கங்களை சேர்ந்தவர்கள் நகரில் காலை முதலே வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கம் ஹசிறு சேனை , மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நடத்தி வந்த போராட்டத்திற்கு எஸ் டி பி ஐ , பி எஸ் பி மற்றும் கன்னட ஆதரவு சங்கங்களை சேர்ந்த தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தது போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் எதிரிலேயே தேசிய நெடுஞசாலையில் உள்ள புவனேஸ்வரி சர்கிளில் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பாக கோஷங்கள் எழுப்பினர். போக்குவரத்து நிறுவன நிலையத்தின் முன்னரும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலகம் எதிரிலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த பந்துக்கு இடையிலேயும் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு பேரூந்துகள் வழக்கம் போல் ஓடின. பால் , செய்தித்தாள்கள் , ஆகிய கடைகள் திறந்துள்ளன . காய்கறி மார்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. பெலகாவியில் பஸ் நிலையம் எதிரில் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தி மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் ., ஹசிறு சேனை , கரவே (ஷிவராமே கௌடா கோஷ்டி) தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய பிரமுகர் சித்தகௌடா மோதகி போராட்டங்களில் ஈடுபட்டார். விவசாயிகள் பஸ்களின் எதிரில் மறியலில் ஈடுபட்டாலும் போலீசார் மட்டும் அந்த இடங்களுக்கு வரவே இல்லை. பஸ் நிலையங்களுக்கு பயணிகள் வந்து பெலகாவியிலிருந்து தாலூக்கா மையங்களுக்கு பஸ்களில் வழக்கம் போல் பயணித்தனர். இந்த பந்திற்கு மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் ஹசிறு சேனை மற்றும் மாநில கரும்பு விவசாயிகள் சங்கங்கள் உட்பட பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. மத்திய அரசின் விவசாய கொள்கைகளை எதிர்த்து அழைப்பு விடுத்திருந்த பரத் பந்திற்கு ராம்நகரிலும் காலை முதலே போராட்டங்கள் துவங்கின. மாவட்டத்தின் சென்னப்பட்டணாவில் கஸ்தூரி கர்நாடக மக்கள் ஆதரவு வேதிகே தொண்டர்கள் மாநில தலைவர் ரமேஷ் கௌடா தலைமையில் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே போல் பல்லாரியிலும் காலை முதலே பந்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்தன. இங்குள்ள ராயல் சர்க்கிளில் விவசாய கொள்கைகளுக்கு எதிராக அதன் நகலை தீ வைத்து கொளுத்தினர். ராயசூரில் பந்துக்கு ஆதரவு இருந்தது. இங்கும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. வர்த்தக மையங்களும் திறந்திருந்தன. இங்குள்ள அம்பேத்கர் சர்கிளில் சேர்ந்த விவிசாய சங்கங்கள் மத்திய அரசுக்குஎதிராக கோஷங்கள் எழுப்பினர். சிக்கமகளூருவில் மக்கள் மற்றும் வாக போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. மக்கள் நடமாட்டம் சற்றே குறைவாக இருந்தது. தவிர ஓட்டல்கள் , மருந்து கடைகள் , பால் மையங்கள் , பூ கடைகள் திறந்திருந்தன. இங்குள்ள ஹனுமந்தப்பா சர்க்கிளில் சேர்ந்த பல்வேறு சங்கங்களை சேர்ந்த தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.