வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.இதனால்ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது.வைகை அணையில் இருந்து 3,754 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வைகை ஆற்றின் கரையோரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

https://www.dailythanthi.com/News/State/flooding-in-madurai-vaigaya-river-warning-to-coastal-residents-762060