வைரம் சிக்கியது

திருமலை, ஜன. 14- ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சாக்லெட் போன்று ரூ 6 கோடி மதிப்புள்ள வைரக்கற்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் 2 பயணிகள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சாக்லெட்களை பிரித்து பார்த்தபோது உள்ளே ஏராளமான வைரக்கற்கள் இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 2 பயணிகளை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அனைத்து சாக்லெட் கவர்களையும் பிரித்து ரூ6 கோடி மதிப்புள்ள வைர கற்களை பறிமுதல் செய்தனர்.