வைர மோதிரம் திருட்டு

பெங்களூரு, பிப்.24- வாடிக்கையாளர் போல வந்த நபர் ஒருவர், ரூ. 75 லட்சம் மதிப்புள்ள‌ வைர மோதிரத்தை திருடிச் சென்ற சம்பவம் எம்.ஜி.சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான நகைக்கடையில் நடந்துள்ளது.
அந்த நபர் வாடிக்கையாளர் போல வந்து, ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடிச் சென்றுள்ளார். வைர மோதிரத்தை திருடிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி உள்ள‌து.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் நகரின் பல பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.