
மும்பை, பிப். 21- சிவசேனா பெயர், சின்னம் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கிடைக்க ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த மந்திரி குலாப் ராவ் பாட்டீலிடம் அவுரங்காபாத்தில் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:- ரூ.2 ஆயிரம் கோடி எங்கு வைக்கப்பட்டு இருந்தது, எத்தனை நோட்டுகள் இருந்தன என சஞ்சய் ராவத்திடம் கேளுங்கள். எங்களுக்கு கட்சி பெயர், சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.