ஸ்கூட்டர் மீது டிப்பர் மோதியதில் மாணவி சாவு

பெங்களூர்:செப்டம்பர். 17 – பிக்னிக் முடித்துக்கொண்டு திரும்பிவரும்போது ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதிய சாலை விபத்தில் மாணவி ஒருவர் இறந்திருப்பதுடன் அவளுடைய நண்பன் காயமடைந்துள்ள சம்பவம் சிக்கபள்ளாபுராவின் வாபசந்திரா மேம்பாலம் அருகில் நடந்துள்ளது. சேஷாதிரிபுரம் கல்லூரியின் முதலாமாண்டு பி காம் மாணவி சைத்ரா ( 19) என்பவர் இந்த விபத்தில் இறந்து போன மாணவி. அவளுடைய நண்பன் லிகித் கௌடா என்பவன் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அவனுடைய நிலையம் கவலைக்கிடமாயுள்ளது . லிகித் கௌடாவுடன் ஸ்ரீனிவாஸ் சாகர் நீர்வீழ்ச்சி பார்க்க சென்று அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது சைத்ரா சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியுள்ளது. ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த சைத்ரா மற்றும் லிகித் கௌடா நெடுஞசாலைக்குள் நுழையும்போது வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சைத்ரா அதே இடத்தில் இறந்ததுடன் அவளுடைய நண்பன் லிகித் கௌடா படுகாயமடைந்துள்ளான். சிக்கபள்ளாபுரா போக்குவரத்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.