ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து


புதுடெல்லி மே 2- தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில் இணைந்து செயல்படுவோம் என்றும் பிரதமர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான பதிவை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்