ஸ்டாலினுடன் கமல் சந்திப்பு


சென்னை.மே.4- முதல்வாக பொறுப்பேற்க உள்ள தி.மு.க,தலைவர் ஸ்டாலினை , மக்கள் நீதிமய்யம் கட்சியின் கமல் சந்தித்து பேசினார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க., , ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஸ்டாலின் 7ம்தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார்.