ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சென்னை: ஜன.6-
தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.