ஸ்பெயினில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மாட்ரிட், பிப். 5- ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மேட்ரிட் சென்றுள்ளார். ஏற்கனவே முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் பல நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார். பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உறுதியாகியுள்ளது. ampo valves, ingeteam, gorlan நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்.7-ம் தேதி சென்னை திரும்புகிறார்.