ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந்தியா சாதனை

புதுடெல்லி: மே. 25 – கடந்த 2023-24-ம் நிதியாண்டில் 15.6 பில்லியன் டாலருக்கு அதாவது ரூ.1.31 லட்சம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டுக்கு 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது, 158 சதவீத வளர்ச்சியாகும்.
அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகமும் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளின் இறக்குமதி முறையே 1.2 பில்லியன் மற்றும் 1.1 பில்லியன் டாலராக இருந்தது.
இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி பட்டியலில் பெட்ரோலை ஸ்மார்ட்போன் விஞ்சியுள்ளது.ஏற்றுமதி மற்றும் உள்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மொபைல் சாதனங்களின் மொத்த விற்பனை மதிப்பு கடந்த நிதியாண்டில் 49.16 பில்லியன் டாலர் அதாவது ரூ.4.13 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 17% வளர்ச்சியாகும்.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்தில் பெரிதும் பயன்பெறும் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது என்று மத்தியவர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட் டுள்ளது.