ஸ்மிருதி இராணிக்கு கொரோனா

புதுடெல்லி, ஜூன்,20
நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 12,899 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி ஜூபின் இரானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா பரிசோதனை செய்திருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி ஸ்மிருதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2020 ஆண்டு முதல் கொரோனா அலை வீசிய போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். (டெல்லி) ராஜேந்திர நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://www.maalaimalar.com/news/national/union-minister-smriti-irani-tested-covid-positive-for-the-second-time-474897