ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர விழா

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றியும், தேசியக் கொடியுடன் பேரணி நடத்தியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். n ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் பொதுமக்கள் தேசியக் கொடி ஏந்தியபடி சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். பொதுவாக காஷ்மீரில் பாதுகாப்பு காரணமாக முழு அடைப்பு போன்ற நிகழ்வு இருக்கும். தற்போது அதுபோன்ற இல்லை எனக் கூறப்படுகிறது. நேற்று பயங்கரவாதியின் சகோதரர் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்திருந்தார். அவர், சுதந்திர தினவிழாயொட்டி காஷ்மீரில் இரண்டு மூன்று நாட்கள் கடைகள் அடைக்கப்பட வலியுறுத்தப்படும். தற்போது அந்த நிலை இல்லை. காஷ்மீர் முன்னேற்றத்தை கண்டுள்ளது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்.