ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கும் காவலர்களுக்கும் மோதல்

திருச்சி: டிச.12
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற காவலாளிகளுக்கும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஐயப்ப பக்தரின் மூக்கு உடைந்து ரத்தம் சிந்தியதால் ஸ்ரீரங்கநாதர் கோவில் நடை மூடப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஆலயம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது ஆலயம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம். சுக்கிரன் தலமாகவும் போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.வைகுண்ட ஏகாதசி விழா இன்றைய தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக வரும் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பசுக்களை விற்கும் இந்து கோவில் பராமரிப்பு நிறுவனம் இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கோவில் காவலாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் முந்திக்கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து காவலாளிகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.