ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்

திருச்சி, மே 6- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று தொடங்கியது. ரங்கநாதா கோஷம் விண்ணை பிளந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து கடந்த 28ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்தார். இதைத் தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையைச் சென்றடைந்தார். மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு,
சித்திரை வீதிகளில் உலா வந்து சந்தனு மண்டபம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையைச் சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஏப்.29 அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையைச் சென்றடைந்தார். தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் உலா வருவார். விழாவில் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மே 8-ம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.
இந்த கோயிலில் தை தேரோட்டமும் பிரசித்தி பெற்றது. 108 திவ்யதேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.