ஸ்ரீ பிரசன்ன பம்பா சுவாமி கோவில் தேர் திருவிழா


கங்காவதி, பிப். 20-நகரின் ஹிராஜெந்தக்கல கிராமத்தின் ஸ்ரீ ப்ரசன்ன பம்பா விருபாக்ஷேஸ்வரர் ஸ்வாமி ஊர் திருவிழா நேற்று மாலை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நைவேத்தியம் ,மலரலங்காரம் மகமங்களார்த்தி உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தன .நகர் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் சுற்றுப்பகுதியிலிருந்தும்வருகை தந்திருந்தப க்தர்கள்பரவசத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை மங்கலவாத்தியங்களுடன் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளில் சென்றது . இந்த திருவிழாவில் பகுதி எம்எல்ஏ பரன்ன முனவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.