ஹம்பி பல்கலை கழக ஓய்வு பெற்ற துணை வேந்தர் மீது எப்.ஐ.ஆர்.

விஜயநகர் : ஆகஸ்ட். 2 – தன்னுடைய பதவியை துஷ்ப்ரயோகம் செய்து பல்கலைக்கழகத்திற்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன் வைத்து ஹம்பி கன்னட பல்கலைக்கழக ஓய்வு பெட்ரா துணை வேந்தர் முனைவர் மல்லிகாகண்டிக்கு எதிராக எப் ஐ ஆர் பதிவாகியுள்ளது . தவிர இவர் வேண்டுமென்றே கே டி பி சி சட்ட நியதிகளை மீறியுள்ளார். என்று குற்றங்சாட்டி ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர் சுப்பண்ணா ராய் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். அவருடைய பதவி காலத்தின் போது 2015-16 மற்றும் 2016-17 காலகட்டத்தில் சில திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த திட்டப்பணிகளால் பல்கலைக்கழகத்திற்கு 13.56 லட்ச ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயபுராவின் ஹோஸபேட்டே போலீஸ் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவாகியுள்ளது.