ஹாரங்கி பாலம் அருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் விழுந்து பலி

குடகு : ஆகஸ்ட். 5 – குஷால் நகர் தாலூகாவின் ஹாரங்கி நீர்வீழ்ச்சியில் எதிரில் உள்ள பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயற்சித்த பொது கால் இடறி கீழே விழுந்து நீரில் மூழ்கிய பெங்களூரை சேர்ந்த பயணியின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 3 அன்று பெங்களூருவை சேர்ந்த சந்தீப் (41) செல்பி ஆசையில் தன் உயிரை இழந்தான். நேற்று இரவு நேரத்தில் இவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்ட போலிஸாருக்கு இவனுடைய இறந்த உடல் கிடைத்துள்ளது . மழைக்கால வெள்ளத்தின் போது எச்சரிக்கை வகிக்குமாறு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியினர் அடிக்கடி எச்சரித்து வந்தாலும் மக்கள் செல்பி மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ படங்கள் எடுக்க முயற்சிப்பதால் இத்தகைய மரணங்கள் நிகழ்கின்றன. தற்போது இறந்து போன முகேஷ் தன்னுடைய மூன்று நண்பர்களுடன் காரில் பெங்களூரிலிருந்து குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ளான். மைசூரு மார்கமாக குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்து கோணிக்கொப்பா மற்றும் ஹாரங்கி நீர்வீழ்ச்சிக்கு ஆகஸ்ட் 3 அன்று வந்திருந்தனர். ஹாரங்கி நீர்வீழ்ச்சியின் எதிரில் உள்ள பாலத்தில் இவர்கள் செல்பி எடுத்துள்ளனர். அப்போது பாலத்தின் சுவர் மீது ஏறி நிற்க முயற்சித்த சந்தீப் கால் சறுக்கி நதியில் விழுந்துள்ளான். அணைக்கட்டிலிருந்து இந்த நீர் வீழ்ச்சிக்கு 4 கேட் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த அற்புத காடியில் செல்பி எடுக்க சந்தீப் முயன்றுள்ளார். பின்னர் நீரில் மூழ்கிய இவனை தீவிரமாக தேடியும் உடல் கிடைக்க வில்லை நேற்று நாள் முழுக்க தேடிய பின்னர் இரவு தீயணைப்பு பிரிவினர் இவனுடைய உடலை தேடி கண்டுபிடித்துள்ளனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.