ஹிஜாப் விவகாரம்: டி.சி கேட்கும் 5 முஸ்லிம் மாணவிகள்

மங்களூர்: ஜூன். 20 – மங்களூர் பல்கலைக்கழகத்தின் ஆதீனத்தின் ஹம்பணக்கட்டே க ல்லூரியில் ஹிஜாப் விவகாரம் இன்னமும் தணியவில்லை. ஹிஜாப் அணிய வாய்ப்பு அளிக்காததால் ஐந்து முஸ்லீம் மாணவிகள் கல்லூரியிலிருந்து மாற்று சான்றிதழ் (டி சி )பெற முன்வந்திருப்பது தெரிய வந்துள்ளது. மங்களூர் பல்கலைக்கழக கல்லூரியில் சமீபத்தில் ஹிஜாப் அணிய வாய்ப்பை தடை செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது . அதன் பின்னர் இந்த பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் விவகாரமாக போதுமான அளவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு விவாதங்கள் நடந்தன. மங்களூர் பல்கலைக்கழக கல்லூரியில் 44 முஸ்லீம் மாணவியர் இருந்த நிலையில் இவர்களில் 15 மாணவியர் ஹிஜாபை நீக்கிவிட்டு கல்லூரிக்கு வர மறுப்பு தெரிவித்தனர். இந்த மாணவியர் வேறு கல்லூரிகளில் சேர வேண்டுமானால் அவர்களுக்கு டி சி தர ஏற்பாடு செய்யப்படும் என மங்களூர்பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்ரமண்யா யடபடித்தாயா தெரிவித்துள்ளார். மங்களூர் பல்கலைக்கழகத்தின் ஹம்பனகட்டே கல்லூரியின் ஐந்து மாணவியர் டி சி பெற்று வேறு கல்லூரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆனால் டி சி பெற இதுவரை அதிகாரபூர்வமாக யாரும் மனு அளிக்க வில்லை. ஆனால் இது குறித்து கல்லூரி முதல்வர் அனுசுயா கூறுகையில் டி சி பெறுவது குறித்து மாணவியர் பேசியுள்ளனர். ஆனால் யாரும் இதுவரை டி சி பெற கடிதம் கொடுக்க வில்லை. தற்போது கல்லூரியில் திருத்தும் பணி நடந்து வருவதால் பட்ட மாணவர்களுக்கு ஆன் லைனில் வகுப்புகள் நடந்து வருகிறது. அனைத்து மாணவரும் இதில் மும்முரமாயுள்ளனர் என்றார்.