ஹீலியம் பலூன் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயம்

பெங்களூரு, அக். 2: பெலத்தூரில் எச்ஏஎல் ஊழியர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஹீலியம் பலூன் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூரு காடுகோடி அருகே பெலத்தூரில் சனிக்கிழமை மாலை எச்ஏஎல் ஊழியர் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது மின் கம்பி அருகே ஹீலியம் பலூன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் எச்ஏஎல் ஊழியர் மற்றும் நான்கு குழந்தைகள் தீக்காயம் அடைந்ததனர். எல்ஏஎல் ஊழியரின் மகள் பலத்த தீக்காயமடைந்தார்.
போலீஸ் வட்டாரங்களின்படி, காயமடைந்தவர்கள் பெலத்தூரைச் சேர்ந்த எச்ஏஎல் ஊழியர் விஜய் ஆதித்ய குமார் (44), தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தியான் சந்தா (7), இஷான் (2), 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சஞ்சய்.எஸ் (8), சோஹிலா.வி (3) ஆவர்.
இது குறித்து டிசிபி (ஒயிட்ஃபீல்ட்) சஞ்சீவ் எம் பாட்டீலின் கூறியது: எச்ஏஎல் ஊழியர் விஜய் ஆதித்ய குமாரின் மகள் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு ஹீலியம் பலூன்கள் வீட்டில் பறக்க விடப்பட்டிருந்தது. விஜய் தனது வீட்டின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, அந்த பலூன்கள் மின்சார கம்பியில் பட்டு வெடித்தது.
அப்போது மின் கம்பியில் தீப்பொறிகள் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ஆதித்ய குமார் மற்றும் அங்கிருந்த குழந்தைகள் தீக்காயம் அடைந்துள்ளது. தீக் ாயமடைந்தவர்கள் விக்டோரியா ருத்துவமனையில் ிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த தீக்காயமடைந்த விஜய் ஆதித்ய குமாரின் 3 வயது மகள் சோஹிலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.