ஹெசரகட்டா ஏரியில் மீன்கள் சாவு

Oplus_131072

பெங்களூர், மே 21- நகரின் ஹெசரகட்டா ஏரியின் மேற்கு பகுதியில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்திருக்கும் நிலையில் மாநில சுற்ற சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த மீன்களை சோதைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த ஏரியில் சிறிய மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக நகரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மழை நீருடன் கால்வாய் தண்ணீரும் ஏரியில் கலந்து விட்ட நிலையில் கால்நடை துறை அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. இது குறித்து க்ரீன் சர்க்கிள் இயக்கத்தை சேர்ந்த வி செல்வராஜன் என்பவர் கூறுகையில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்கள் இறந்திருப்பது குறித்து சுற்ற சூழல் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்தோம். மீன்கள் இறந்திருப்பது சுற்றசூழல் பாதிப்பால் என்பது உறுதியானால் ஹெசரகட்டா ஏரியில் உள்ள தண்ணீர் குறித்து ஆதங்கம் ஏற்படுகிறது. பல்வேறு அற்புத பறவைகளின் இருப்பிடமாக உள்ள இந்த ஏரியில் சுற்ற சூழல் பாதிப்புகள் இருக்கும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டி வருகிறது. ஹெசரகட்டா ஏரியின் சுற்றிலும் பல தொழிற்சாலைகள் உள்ளன. கால் நடை ஆய்வு மையத்தின் சீமன் தருவித்து மையம் மற்றும் ஆடு மற்றும் பன்றிகளின் பண்ணைகள் உள்ளன. மீன்கள் ஏரியின் நீரை சென்றடையும் முன்னரே இறந்தவையா என்பது சோதனைக்கு பின்னரே தெரியவரும். இது குறித்து அனைத்து வித மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்தூர் வீதி அருகில் உள்ள பள்ளத்தில் இருந்து மழை நீர் ஹெசரக்கட்டா ஏரிக்கு வருகின்றது. எனவே அங்குள்ள தண்ணீரின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹெசரகட்டா ஏரியில் மீன்கள் இறந்துள்ளது தொடர்பாக முழு அறிக்கை அளிக்குமாறு சுடர்சூழல் பாதுகாப்பு மைய உறுப்பினர் மற்றும் செயலாளர் ஹெச் சி பாலச்சந்திரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.