ஹெச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்க அக்.11-
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் முக்கிய பிரச்சனையாக அந்நாட்டு அரசிடம் அரசு சேவைகளுக்கும், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு பணம் இல்லாமத் தவித்து வருகிறது. இதனால் கடந்த மாதம் அமெரிக்காவில் ஷட்டவுன் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது, ஆனாஸ் ஜோ பைடன் அரசு அவசர அவசரமாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குறுகிய கால செலவின திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது மூலம் US Shutdown தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த செலவின மசோதாவும் நவம்பர் 17, 2023 வரையில் தான் காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது, இதனால் நவம்பர் 17 ஆம் தேதி மீண்டும் ஒரு விஷப்பரிட்சை அமெரிக்க பொருளாதாரத்திற்கு காத்திருக்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் இமிகிரேஷன் வழக்கறிஞர்கள் ஹெச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். US Shutdown மூலம் பல அரசு சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெச்-1பி விசா போன்ற முக்கியமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். இப்படியிருக்கையில் இமிகிரேஷன் வழக்கறிஞர்கள் ஹெச்-1பி விசா வைத்துள்ளவர்கள் முன்கூட்டியே நீட்டிப்புக்கு விண்ணப்பம் செய்யுங்கள், மேலும் ஹெச்1பி கேப்-ல் 2வது லாட்டரிக்கு அக்டோபர் இறுதிக்குள் விண்னப்பிக்க எச்சிர்க்கை விடுத்துள்ளது. மேலும் ஹெச்-1பி விசா வைத்துள்ளவர்கள் புதிய வேலைவாய்ப்புக்கு மாற திட்டமிட்டு இருந்தால் விரைவில் கையில் இருக்கும் ஜாப் ஆஃபரை தேர்வு செய்யுமாறு இமிகிரேஷன் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் புதிய வேலையில் சேர்ந்த உடன் அந்த நிறுவனம் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் Labour Condition Application (LCA) பதிவு செய்து, ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என கூறுகின்றனர்.