ஹெல்மெட் அணியாமல் போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 2 பேர் பலி

பெங்களூரு, செப்.22
அளவுக்கு அதிகமாக குடித்து போதையில் ஹெல்மெட் அணியாமல் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார் பைக்கில் சென்ற இருவர் கம்பத்தில் மோதி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது;
எஸ்வந்தபூரில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்று அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, ஹெல்மெட் அணியாமல் அதி வேகமாக 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம். டபிள்யூ பைக்கில் பனசங்கரி மன்மோகன் (31), நிகில் (25) ஆகியோர் இன்று அதிகாலை 3:30 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
எஸ்வந்தபுரம் அருகே உள்ள ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் செல்லும் போது பைக் கட்டுப் பாட்டை இழந்தது. சாலை பகுதியில் இருந்த கம்பத்தில் மோதியது.இந்த விபத்தில்
பனசங்கரி மன்மோகன், நிகில் ஆகிய இருவரை தூக்கி வீசியது. இதில் உடல்கள் சிதறி உயிர் இழந்தனர்.பைக் சின்னா பின்னம் ஆனது.இந்த இருவரின் உடல்களை ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக எஸ்வந்தபுரம் போக்குவரத்து துறை போலீஸ் டிசிபி சச்சின் கோர்படே தெரிவித்துள்ளார். விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.