ஹேஜ் ஜிங்கோப் மரணம்

கெய்ரோ: பிப்.5
நமீபிய அதிபர் ஹேஜ் ஜிங்கோப் உடல்நல குறைவால் நேற்று காலமானார். தென்ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடு நமீபியா. இதன் அதிபராக கடந்த 2015ம் ஆண்டு நமீபிய அதிபராக பதவியேற்ற ஹேஜ் ஜிங்கோப்(82) தற்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகித்து வந்தார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
ஹேஜ் உயிரிழந்ததையடுத்து அங்கொலா முபும்பா இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.