ஹேமாவதி நதியில் மூழ்கி இளம் பெண் சாவு

ஹாசன் : டிசம்பர். 25 – ஹேமாவதி நதியில் இளம் பெண் ஒருவள் மூழ்கி இறந்துள்ள சம்பவம் கூரூரு அருகில் நடந்துள்ளது. கூரூரு அரளிகட்டே பகுதியில் வசித்து வந்த கிரிஷ் என்பவரின் மகள் நித்யா (19) என்பவள் நேற்று அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு தன்னுடைய உறவினர்களுடன் அரளிக்கட்டில் உள்ள ஆஞ்சநேய கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் பூஜை முடித்து கொண்டு பிரசாதம் உண்டு பின்னர் ஹேமாவதி நதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்காதவகையில் நதியில் மூழ்கி இறந்துள்ளார். இவரின் உடலை கண்டெடுக்கு நேற்று இரவு முழுக்க தீயணைப்பு ஊழியர்கள் முயற்சிகள் மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை. இந்த வகையில் இன்று காலை மீண்டும் கூறுரு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.