ஹைதராபாத்தில்17 கிலோ தங்கம் பறிமுதல்

ஹைதராபாத்: அக்.17-
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவ.30-ல் நடைபெற உள்ளது. இதையடுத்து போலீஸார் 24 மணி நேரமும் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஹைதராபாத் மியாப்பூரில் நடந்த தீவிர வாகன சோதனையில், எவ்வித ஆவணங்களும் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 17 கிலோ தங்க நகைகள், 17.5 கிலோ வெள்ளி கொலுசுகளை போலீஸார் பறிமுதல் செய்து வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோன்று, நேற்றுமுன் தினம் நடந்த சோதனையில், ஹைதராபாத் காந்தி நகர் பகுதியில் ரூ. 2.09 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.