ஹைதராபாத் வாலிபர் ஆஸி.யில் உயிரிழப்பு

ஹைதராபாத், மே 25- ஹைதராபாத்தை சேர்ந்தவர் அர்விந்த் (30). இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். இவருடைய தாயார் உஷாராணி, மகனை பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் கடந்த 13-ம் தேதி ஹைதராபாத் திரும்பினார்.அர்விந்தும் அவரது கர்ப்பிணி மனைவியும் மே 20-ம் தேதி ஹைதராபாத் வர டிக்கெட் கூட முன் பதிவு செய்திருந்தனர் . இந்நிலையில், தனது காரை கழுவிக்கொண்டு வருவதாக கூறி சென்ற அர்விந்த் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள கடற்கரை ஓரம் ஒரு ஆணின் சடலம் கிடைத்தது. அது அர்விந்தின் உடல்தான் என்பதை அவரதுமனைவி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் இது கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.