பெங்களூர், ஜன. 2-
கர்நாடக மாநில பிஜேபி தலைவர் விஜயேந்திரா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கர்நாடக மாநிலத்தில் நிலவி வருகிற கருத்து வேறுபாடுகள் குறித்து பேசியுள்ளார்.மாநில பிஜேபி தலைவர் விஜயேந்திரா டெல்லியில் புதன் கிழமை மத்திய அமைச்சர் அமித் ஷா வை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.கட்சி வளர்ச்சிப் பணிகள், நடவடிக்கைகள் குறித்தும், கட்சிக்குள் ஒத்துழையாமை, கருத்து வேறுபாடுகள் பற்றியும் விளக்கியுள்ளார். கர்நாடக மாநில பிரச்சனைகள் உன்னிப்பாக கவனித்து கருத்தறிந்தார்.காங்கிரஸ் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து செயல்பட முற்படும்போது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளதை தெரிவித்தார். அவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.