திருவண்ணாமலை: ஜூலை 16- திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், வித்தியாசமான உயிரினம் நடமாடுவதாக தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணையும் தாக்கிவிட்டதாம்.. மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று வேகமாக பரவி வரும் இந்த தகவல் திருவண்ணாமலை பகுதி மக்களை பீதி அடைய செய்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளது… இந்த காட்டுப்பகுதியில் ஏராளமான மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளது.
இங்கு சிறுத்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.. பல்வேறு சமயங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகவும், அது தொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையத்திலும் அவ்வப்போது வெளியாகி பகீரை கிளப்பி விடும். மர்ம விலங்கு ஆனால், தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு தாக்கியதில் ஆடுகள் ஏராளமாக இறக்கும் சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன.. ஆடுகள் மட்டுமல்லாமல், கன்று குட்டிகளை மர்ம விலங்கு தாக்கியிருக்கின்றன.. அந்தவகையில், திருவண்ணாமலை தண்டராம்பட்டு பகுதியில் சிறுத்தை மற்றும் மர்ம விலங்குகளின் நடமாட்டம் உள்ளது, அங்குள்ள மக்களை எந்நேரமும் கிலியில் ஆழ்த்தி சென்றுவிடும். இந்நிலையில், தண்டரம்பட்டு வட்டம் கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான விலங்கு உலவுவதாக பகீர் தகவல் பரவியது.. அந்த விலங்குக்கு 4 விரல்கள் உள்ளதாம்.. ஆட்டின் தலை இருக்கிறதாம்.. Recommended For You “ஜஸ்ட் மிஸ்.. ரயில் லோகோ பைலட்டே இறங்கி வந்து கேட்டை மூடிவிட்டு சென்றதால் பரபரத்த திருவண்ணாமலை “ போட்டோக்கள் பரவின அதுமட்டுமல்ல, அந்த மர்ம உயிரினம், காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கிவிட்டதாக கூறி, அது தொடர்பான சில போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகவேகமாக பரவின…. இதைப் பார்த்து மாவட்ட மக்கள் நடுங்கிவிட்டார்கள்.