Home விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் இந்தியா முதல் வெற்றியை ருசித்தது எப்படி?

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் இந்தியா முதல் வெற்றியை ருசித்தது எப்படி?

பர்மிங்காம், ஜூலை 7- 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார். அதேவேளையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 184, ஹாரி புரூக் 158 ரன்கள் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை வீழ்த்தினர். 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 161, ரவீந்திர ஜடேஜா 69, ரிஷப் பந்த் 65, கே.எல் ராகுல் 55 ரன்கள் சேர்த்தனர்.
608 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 16 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 72 ரன்​கள் எடுத்​தது. ஸாக் கிராவ்லி 0, பென் டக்​கெட் 25, ஜோ ரூட் 6 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஆலி போப் 24, ஹாரி புரூக் 15 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 7 விக்​கெட்​கள் இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 536 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை இங்​கிலாந்து அணி எதிர்​கொண்​டது. இந்​திய நேரப்​படி பிற்​பகல் 3.30 மணிக்கு தொடங்க வேண்​டிய ஆட்​டம் மழை காரண​மாக மாலை 5.05 மணிக்​கு​தான் தொடங்​கப்​பட்​டது.
இதனால் வழக்​க​மான 90 ஓவர்​களுக்கு பதிலாக 80 ஓவர்​கள் மட்​டுமே வீசப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது. பேட்​டிங்கை தொடர்ந்த இங்​கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்​திருந்​தது. ஆலி போப் 50 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆகாஷ் தீப் பந்​தில் போல்​டா​னார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் ஹாரி புரூக்கை எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேற்​றி​னார் ஆகாஷ் தீப். 31 பந்​துகளை எதிர்​கொண்ட ஹாரி புரூக் 3 பவுண்​டரி​களு​டன் 23 ரன்​கள் சேர்த்​தார். 83 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் கேப்​டன் பென் ஸ்டோக்​ஸுடன் இணைந்த ஜேமி ஸ்மித் சீராக ரன்​கள் சேர்த்​தார். நிதான​மாக விளை​யாடிய பென் ஸ்டோக்ஸ் 73 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 33 ரன்​கள் எடுத்த நிலை​யில் வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

Exit mobile version