இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி

கொழும்பு, பிப். 20- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று ‘பி’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்​னாள் சாம்​பிய​னான இலங்​கை, ஜிம்பாப்வே அணி​யுடன் விளை​யாடியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 178 ரன்கள் குவித்​தது. தனது 19-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீர​ரான பதும் நிசங்கா 41 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 62 ரன்கள் விளாசி​னார். குஷால் பெரேரா 22, குஷால் மெண்டிஸ் 14, துனித் வெல்​லாலகே 15, கமிந்து மெண்​டிஸ் 7, கேப்​டன் தசன் ஷனகா 6 ரன்​கள் சேர்த்​தனர். இறு​திக்​கட்ட ஓவர்​களில் மட்​டையை சுழற்​றிய பவன் ரத்​னாயகே 25 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் விளாசி​னார். அவரது அதிரடி காரண​மாக இலங்கை அணி​யால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்​தது. கடைசி 2 ஓவர்களில் மட்​டும் பவன் ரத்​னாயகே 30 ரன்​களை விளாசியிருந்​தார். ஜிம்​பாப்வே அணி சார்​பில் கிரேம் கிரீமர், பிராடு இவான்​ஸ், பிளெசிங் முசா​ரா​பானி ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். 179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி ஒரு கட்​டத்​தில் 14 ஓவர்​களில் 2 விக்​கெட்கள் இழப்​புக்கு 114 ரன்கள் எடுத்திருந்​தது. தடிவ​னாஷே மரு​மணி 26 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் ரியான் பரூல் 12 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். ஜிம்​பாப்வே அணி​யின் வெற்​றிக்கு கடைசி 6 ஓவர்​களில் 65 ரன்கள் தேவை​யாக இருந்​தன. துஷான் ஹேமந்தா வீசிய 15-வது ஓவரில் ஜிம்​பாப்வே அணி​யின் கேப்​டன் சிகந்​தர் ராசா கடைசி 3 பந்​துகளில் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியை விரட்​டி​னார். இந்த ஓவரில் 20 ரன்​கள் சேர்க்கப்​பட்​டன. தீக்​சனா வீசிய அடுத்த ஓவரில் சிகந்​தர் ராசா தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸரை விளாசி​னார்.