சபரிமலை: ஜூலை 29-
சபரிமலை கோயிலில் இன்று நடைதிறக்கப்படுகிறது. நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்படுவதால் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது குறித்து அடைக்கப்படுவது குறித்தும் தேவஸ்வம் போர்டு ஒரு அட்டவணையை வெளியிடும். அதன்படிதான் நடை திறப்பும் அடைப்பும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகரவிளக்கு (ஜன 14), மாசி மாதாந்திர பூஜை (பிப் 12), பங்குனி மாதாந்திர பூஜைக்கு (மார்ச் 14), சபரிமலை உற்சவம் (ஏப்ரல் 1), கொடியேற்றம் (ஏப் 2, பள்ளி வேட்டை (ஏப் 10), பங்குனி உத்திரம் (ஏப் 11), விஷு திருவிழா (ஏப்ரல் 10), விஷு பூஜை (ஏப். 14), வைகாசி மாதாந்திர பூஜை (மே 14), சிலை பிரதிஷ்டை பூஜை (ஜூன் 4), ஆனி மாதாந்திர பூஜை (ஜூன் 14), ஆடி மாதாந்திர பூஜை (ஜூலை 16), ஆவணி மாதாந்திர பூஜை (ஆகஸ்ட் 16), ஓணம் பண்டிகை (செப் 2), புரட்டாசி மாதாந்திர பூஜை (செப் 16), ஐப்பசி மாதாந்திர பூஜை (அக்.17), ஸ்ரீசித்ர ஆட்ட திருநாள் (அக். 20), மண்டல பூஜை (நவம்பர் 16), மண்டல பூஜை (டிச. 27), மகர விளக்கு உற்சவம் (டிச.30), மகரவிளக்கு – ஜன.14 ஆகிய தேதிகளில் நடைத் திறக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.