Home Front Page News சரோஜாதேவி உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்

சரோஜாதேவி உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்

பெங்களூரு: ஜூலை 15 –
காலமான கன்னடத்துப் பைங்கிளி அபிநய சரஸ்வதி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இறுதி சடங்குகள் இன்று நடந்தது. பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் காலை 11:30 மணி வரை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். முதல்வர் சித்தரமையா மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்கள் ஒவ்வொருவராக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த வாகனத்தில் சரோஜாதேவி உடல் சென்னபட்டணாவுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு, தசாவரத்தில் உள்ள கன்வா அணை அருகே வொக்கலிகா பாரம்பரியத்தின்படி இறுதிச் சடங்குகள் நடைபெ நடைபெற உள்ளது. சரோஜாதேவி வீடு அமைந்துள்ள பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பழ பழம்பெரும் நடிகை சரோஜாதேவி நேற்று காலமானார். தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து நாடு முழுவதும் புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர் சிவாஜி உடன் நடித்த படங்கள் மிக மிக பிரபலம் அடைந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சரோஜாதேவி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் சரோஜாதேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உளளனர்.

Exit mobile version