Home Front Page News சென்னையில் இருந்து கிளம்பும்விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

சென்னையில் இருந்து கிளம்பும்விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

சென்னை: டிச.21- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை என்பது 3 முதல் 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த 6 நாளில் ஆங்கில புத்தாண்டு வர உள்ளது. தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் 23ம் தேதி வரை இயங்கும். அதன்பிறகு விடுமுறை வழங்கப்படுகிறது. அதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளது. மீண்டும் பள்ளி, கல்லூரிகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்த பிறகு தான் திறக்கப்பட உள்ளது. இனி பள்ளி, கல்லூரிகள் புத்தாண்டுக்கு பிறகு தான் திறக்கப்படும். இதனால் சென்னையில் வசிக்கும் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்து பஸ், ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவை தொடங்கி உள்ளனர்.இதனால் தற்போது சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

Exit mobile version