Home Front Page News தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஜூலை 7-
அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version