Home மாவட்டங்கள் பெங்களூர் நீதிபதிகளை விமர்சித்து வீடியோ – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?

நீதிபதிகளை விமர்சித்து வீடியோ – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?

மதுரை: ஜூலை 29-
நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது.
உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​வ​தாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு வழக்​கறிஞர் எஸ்​.​வாஞ்​சி​நாதன் புகார் அனுப்​பி​யிருந்​தார். இந்​தப் புகார் வழக்​கறிஞர்​கள் வாட்​ஸ்​அப் குழு​வில் வைரலானது.
இந்​நிலை​யில் தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக பேராசிரியர் நியமனம் தொடர்​பான மேல்​முறை​யீடு மனு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வில் ஜூலை 25-ல் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மேல்​முறையீட்டு வழக்​கில் 3-வது எதிர்​மனு​தா​ரரின் வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதனை, நீதி​மன்​றத்​தில் ஆஜராக நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.
அதன்​படி வாஞ்​சி​நாதன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். அவரிடம் எங்​கள் இரு நீதிப​தி​களில் ஒரு​வர் (ஜி.ஆர்​.சு​வாமி​நாதன்) சாதி பாகு​பாடுடன் செயல்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளீர்​கள். அதே நிலைப்​பாட்​டில்​தான் தற்​போதும் உள்​ளீர்​களா? எனக் கேள்வி எழுப்​பினர். அதற்​கு, நீதித்​துறை மீதான குற்​றச்​சாட்டு குறித்து எழுத்​துப்​பூர்வ உத்​தரவு பிறப்​பித்​தால் பதில் அளிப்​ப​தாக வாஞ்சிநாதன் தெரி​வித்​தார்.
இதையடுத்து நீதிபதி சாதிரீ​தி​யாகச் செயல்​படு​வ​தாகக் கூறப்​பட்ட குற்​றச்​சாட்டு குறித்து நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்க உத்தர​விட்டு விசா​ரணையை ஜூலை 28-க்கு நீதிப​தி​கள் ஒத்​தி​வைத்​தனர். இதற்​கிடையே, வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நீதிமன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுப்​ப​தைக் கைவிடு​மாறு உயர் நீதி​மன்ற ஓய்​வு​ பெற்ற நீதிப​தி​கள் கே.சந்​துரு, டி.ஹரிபரந்​தாமன், சி.டி.செல்​வம், அக்​பர்​அலி, பி.கலை​யரசன், எஸ்​.​விமலா, எஸ்​.எஸ்​.சுந்​தர் ஆகியோர் உயர் நீதி​மன்ற அமர்​வுக்கு வேண்​டு​கோள் விடுத்​தனர்.
வழக்​கறிஞர்​கள் சங்​கங்​களும் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கை​யைக் கைவிடு​மாறு கோரிக்கை வைத்​தன. இந்​நிலை​யில், வாஞ்​சி​நாதன் வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. வாஞ்​சி​நாதன் ஆஜராகி விளக்க அறிக்​கை​யைத் தாக்​கல் செய்​தார். அப்​போது, தமிழக முதல்​வருக்கு பல்​கலைக்​கழக வேந்​தருக்​கான அதி​காரம் வழங்​கும் சட்​டத்​துக்கு தடை கோரிய வழக்​கில் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் அமர்வு நடத்​திய விசா​ரணையை வாஞ்​சி​நாதன் விமர்​சனம் செய்து பேசிய வீடியோ ஒளிபரப்​பப்​பட்​டது.
‘இந்த வீடியோ​வில் நீதித்​துறையைக் கடுமை​யாக விமர்சித்து கருத்து தெரி​வித்​துள்​ளீர்​கள். அதற்கு என்ன பதில் சொல்​கிறீர்​கள்?’ என வாஞ்​சி​நாதனிடம் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் கேட்​டார்.அதற்கு வாஞ்​சி​நாதன், ‘வீடியோ​வில் எப்​படி வேண்​டு​மா​னாலும் மாற்​றம் செய்​ய​லாம், வீடியோவை ஒளிபரப்பி அதற்கு விளக்​கம் கேட்​பது முறையல்ல. வீடியோ தலைப்​புக்கு நான் பொறுப்​பல்ல. எழுத்​துப்​ பூர்​வ​மாகக் கேட்​டால் பதில் அளிக்​கிறேன்.

மேலும் உங்​கள் (ஜி.ஆர்​.சு​வாமி​நாதன்) மீது நான் தெரி​வித்த புகாரை நீங்​களே விசா​ரிக்க முடி​யாது’ என்​றார். அதற்கு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ‘நாங்​கள் தலைமை நீதிப​திக்கு புகார் அனுப்​பியது குறித்து விசா​ரிக்​க​வில்​லை. நீங்​கள் வைத்த குற்​றச்​சாட்​டில் தற்​போதும் அதே நிலை​யில் இருக்​கிறீர்​களா? என விளக்​கம் கேட்​கத்​தான் அழைத்​தோம். அதற்​குள் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுத்​த​தாக நீங்​களும், உங்​கள் பின்​னால் இருப்​பவர்​களும் பேசி வரு​கிறார்​கள்.நீங்​கள் என்​னுடைய தீர்ப்பை விமர்​சிப்​ப​தற்கு நூறு சதவீதம் உரிமை உள்​ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்​கிறேன். ஆனால், சாதி பாகு​பாட்​டுடன் தீர்ப்​பளிப்​ப​தாகக் குற்​றம்​சாட்​டு​வது என்​பது வித்​தி​யாச​மானது. அதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. நாங்​கள் ஒன்​றும் முட்​டாள்​கள் அல்ல. இதை உங்​களு​டன் இருக்​கும் வழக்​கறிஞர்​களிட​மும், ஓய்​வு​பெற்ற நீதிப​தி​களிட​மும் கூறுங்​கள். எனது நீதித்​துறை செயல்​பாட்​டில் யாரும் தலை​யிட முடி​யாது.தொடர்ந்து 4 ஆண்​டு​களாக நீதித்​துறையை, நீதிப​தி​களை விமர்​சனம் செய்து வரு​கிறீர்​கள்? சமூக வலை​தளங்​களில் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​கிறார் எனக் கூறி​யுள்​ளீர்​கள். அது உண்மை என்​றால் நீதி​மன்ற அவம​திப்​பு​தான். என்ன பதில்சொல்​லப் போகிறீர்​கள்?’ எனக் கேட்​டனர்.அதற்கு வாஞ்​சி​நாதன், ‘எழுத்​துப்​பூர்​வ​மாக உத்​தர​விட்​டால், பதிலளிக்​கத்தயார்’ என்​றார். பின்​னர் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ‘வாய்​மொழி​யாகப் பதில் அளித்​தால்​போதும். பதிலளிக்​கத் தயங்​கு​வது ஏன்?’ என்​றார்.

Exit mobile version