ஆஸ்ட்ராவா நகர், ஜூன் 26- செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து பட்டம் வென்றார். இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.
அதிகபசட்மாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். > டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ் அணி. 138 ரன்கள் இலக்கை விரட்டிய திருப்பூர் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து வெற்றி பெற்றது.